சென்னை : வாதி தற்போது கனடாவில், வசித்து வருவதாகவும் வாதிக்கும் அவரது மனைவி வித்தியா, என்பவருக்கும் திருமணமாகி ஜோஷிகா(14) , கௌதம் ரிஷி (8), என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2020 ,ஆம் ஆண்டில் வாதிக்கும் அவரது மனைவி வித்தியாவிற்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர், இது சம்பந்தமாக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வழக்கு தற்போது இருவரும் சேர்ந்து வாழ்வதாக சமாதானம் ஆன நிலையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும், வாதி பிரிந்து வாழ்ந்த போது. கடந்த 2020ம் ஆண்டு மறுமணம் செய்யவேண்டி ஆன்லைன், மூலமாக விவாகரத்து மற்றும் விதவை பெண் வேண்டும் என திருமண தகவல், மையத்தில்பதிவு செய்திருந்த நிலையில் மேற்படி எதிரி மேற்ப்படி எண்களில் தொடர்பு கொண்டு தனது தங்கை விதவையாக இருப்பதாகவும் அவருக்கு, தங்களை மிகவும் பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தனர்.
சொல்லி தொடர்ந்து வாதியிடம், இருந்து ஆன்லைன் மூலமாக (ரூபாய் 1,35,25 925 ), பெற்ற நிலையில் எதிரியின் தங்கை ராஜேஸ்வரியை, பார்ப்பதற்காக கடந்த (02-03-2022), ம் தேதி கனடாவில், இருந்து புறப்பட்டு சம்பவ இடமான மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன், சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில், தங்கி எதிரியிடம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது தங்கைக்கு பரிசு பொருட்கள் வாங்கி இருப்பதாகவும், அதைப் பெற்றுக்கொள்ள வருமாறு கூறியதை தொடரந்து எதிரி வாதியிடம் வந்து வாங்கியிருக்கும், பரிசுப் பொருள்களை தருமாறு கேட்டு தகராறு செய்து ரூ 3,60,903 மதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு மிரட்டிவிட்டு சென்றதாகவும் ,இதனால் பயத்தில் கனடா புறப்பட்டு சென்றதாக தெரிவித்தார்.
திரும்பவும் (23.04-22) ,ம் தேதி சென்னை வந்து கூடுதல் ஆணையாளர், தெற்கு அவர்களிடம் புகார் கொடுத்து இனை ஆணையாளர், கிழக்கு மண்டலம், துணை ஆணையாளர் மயிலாப்பூர், உதவி ஆணையாளர் இராயப்பேட்டை, வழியாக கடந்த (24.04 22), ம் தேதி 19.00 மணிக்கு வழிவழியாக வந்த புகாரை பெற்று மேற்ப்படி குற்றவழக்குபதிவு செய்து (25.04-22), ம் தேதி காலை 07.30 மணிக்கு ஆய்வாளர் திரு.பசுபதி, அவர்கள் தலைமையில் தலைமை காவலர்கள் திரு.சிவபாண்டியன்(HC26980 – 2003), திரு.ராஜேஷ்(HC36054 – 2003), முதல்நிலை காவலர் திரு. பார்த்தீபன் (Gripc44515 – 2011), ஆகியோர் எதிரியின் இருப்பிடம் சென்று கைது செய்தனர்.
வாதியிடம் வாங்கிய பரிசுப்பொருட்களை, பறிமுதல் செய்து 08.15, மணிக்கு E2 காவல்நிலையம் கொண்டுவந்து விசாரனை செய்து நேற்று (26.04 – 22), ம் தேதி எதிரியிடம் வாக்கு மூலம் பதிவு செய்து, எதிரியின் வங்கிகணக்கு மற்றும் அவரது உறவினர்கள் வங்கிகணக்கில் டெப்பாசிட் செய்த பணங்களையும் மேற்ப்படி பொருள்களையும் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டுவந்து, விசாரனை முடித்து 21.30 மணிக்கு சைதாப்பேட்டை, கனம் 18வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொறுப்பு 23 வது குற்றவியல் நடுவர் திரு.கெளதமன், அவர்கள் முன்பு 22.30 மணிக்க ஆஜர்படுத்தி வரும் 10.05-22ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று 23.00 மணிக்கு சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.