சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வரகூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ரமேஷ் (35), விவசாயியான ரமேஷுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பிரிந்து ரமேஷ் வசித்து வருகிறார். சிறுவாச்சூர், கொரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கவிதா(28), இவர், ரமேஷின் விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் மயில்சாமி இறந்துவிட்ட நிலையில், சென்னைக்கு கூலி வேலைக்கு சென்ற பிறகு பெயின்டரான ஜெகன் என்பவருடன், கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குடிப்பழக்கத்துக்கு ஆளான ஜெகன் மீது வெறுப்பு ஏற்படவே, அவரைப் பிரிந்து ரமேஷ் தோட்டத்தில், கூலி வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ரமேஷ், கவிதா ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதாவின் இருப்பிடத்தை கண்டறிந்த ஜெகன் மற்றும் அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், சென்னையிலிருந்து வரகூர் கிராமத்திற்கு வந்து, தனிமையில், இருந்த ரமேஷ் மற்றும் கவிதா ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, இருசக்கர வாகனத்தில் இருவரும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதியினர், தலைவாசல் காவல் நிலையத்துக்கு, தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தலைவாசல்காவல் துறையினர், ஆபத்தான நிலையில், உள்ள இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரையும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலைவாசல் காவல் துறையினர், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்