கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கிட்டம்மாள்( வயது 38) கூலி தொழில் செய்துவந்தனர் . இவர்களது மகன் அர்ஜுனன் (வயது 12) சிக்கலாம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். செல்போனில் கேம் விளையாடுவதில் நேற்று அர்ஜுனனுக்கும் அவரது அண்ணன் ஈஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
.இதுகுறித்து தாயார் கிட்டம்மாள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.செல்போனில் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.