திருவள்ளூர்: செங்குன்றத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்கள் உறுதிமொழி கையெழுத்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆணையரகம் செங்குன்றம் காவல் சரகம் போக்குவரத்து காவல் துறை சார்பில்உலக மகளிர் தின விழா செங்குன்றம் போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைசாமி தலைமையில் செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் செங்குன்றம் பஸ்நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. இதில் போக்கு வரத்து மகளிர் காவலர்களுக்கு அப்பகுதி பெண்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் மகளிர் காவலர்கள் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் ரோஜா மலர் வழங்கினர் பெண்களை மரியாதையுடன் சம உரிமையுடன் நடத்துவேன் பெண்கள் கல்வி மேம்பட பாடுபடுவேன். பெண்வீட்டாரிடம் வரதட்சணை வாங்கமாட்டேன். பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பேன் எந்த சூழ்நிலையிலும் வன்கொடுமையில் ஈடுபட மாட்டேன். பெண்களின் உடல் நலனில் அக்கறை கொள்வேன் ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கு ஊதியம் வழங்குவேன் என ஆண்கள் உறுதிமொழி கையெழுத்திட்டனர் விழாவில் மகளிர் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்