சென்னை : சென்னை பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கன்னப்பாளையம் செல்லும் சாலையோரம் உள்ள குப்பை மேட்டில், தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி திருவேற்காடு காவல் துறையினர் , நடத்திய விசாரணையில் கொலையானவர், மாங்காடு சாதிக் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதின்(32), என்பது தெரியவந்தது. சிராஜூதினை கொலை செய்தவர்கள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என காவல் துறையினர், விசாரித்து வந்தனர். மேலும் துண்டிக்கப்பட்ட அவரது தலை மற்றும் கைகளையும் தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் கொலையான சிராஜூதின், தனது கள்ளக்காதலி ஜூனத்(45), என்பவருடன் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் துணை நடிகை ஒருவரை கொலை செய்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததா? எனவும் காவல் துறையினர், விசாரித்தனர். சிராஜூதினின் கள்ளக்காதலி ஜூனத்திடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
முன்விசாரனையில், கூறியபடி சம்பவம் நடந்தது என்று தெரிவித்தார். அதன்படி மகேஷ் வாங்கி வைத்திருந்த கத்தியால் சிராஜூதின் தலை மற்றும் இரண்டு கைகளையும் துண்டாக வெட்டி, அதனை மோட்டார் சைக்கிளில், எடுத்துச்சென்று திருமழிசை பகுதியில், தீ வைத்து எரித்து விட்டதாகவும், சிராஜூதின் உடலை அவரது ஆட்டோவிலேயே எடுத்துச்சென்று கன்னப்பாளையம் பகுதியில் குப்பை மேட்டில், வீசி தீ வைத்து எரித்து விட்டு, ஆட்டோவின் நம்பர்களை அழித்து விட்டு ஆவடியில் ஒரு பகுதியில் விட்டு சென்றதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தெரியவந்ததாக காவல் துறையினர், தெரிவித்தனர். இதையடுத்து ஜூனத் மற்றும் மகேஷ் இருவரையும் திருவேற்காடு காவல் துறையினர், கைது செய்து விசாரித்து வருகின்றனர். துண்டிக்கப்பட்ட சிராஜூதின் தலை மற்றும் கைகளை எரித்த இடத்தை மகேஷ் மாறி, மாறி கூறி வருவதால், இன்னும் அவரது தலை, கைகள் கிடைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலை மற்றும் கைகள் கிடைக்கவில்லை என்றாலும் டி.என்.ஏ. பரிசோதனையின் அடிப்படையில், சிராஜூதின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும், என காவல் துறையினர், தெரிவித்தனர்.