கோவை : கோவை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 10 வயது மாணவி .இவர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் மாணிக்க சுந்தரம் ( வயது 47) இவர் அந்த மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கூறினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் ஆசிரியர் மாணிக்க சுந்தரம் , மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் மாணிக்க சுந்தரம் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் மீதுபோக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.