தர்மபுரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டுபுலியூரை சேர்ந்தவர் முபாரக் (26), தனியார் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மொரப்பூர் காவல் துறையினர், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை கைது செய்தனர். இந்தநிலையில் முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு. கலைச்செல்வன், பரிந்துரை செய்தார். இதை ஏற்று முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் திருமதி. திவ்யதர்சினி, உத்தரவிட்டார். இதையடுத்து முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர், மீண்டும் கைது செய்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.