சேலம் : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தும்பிபாடி, பன்னப்பட்டி உள்ளிட்ட ஊராட்சியில், பொதுயிடங்களில் மது குடிப்பவர்கள், சிக்கன் கடை, உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இரண்டு டிப்டாப் ஆசாமிகள் மிரட்டி மாமுல் கேட்டு வசூலில் ஈடுபட்ட இரண்டு டிப்டாப் ஆசாமிகள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரனை மேற்கொண்டபோது இரண்டு ஊராட்சி பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் கடைகளுக்கு தகுந்தார்போல் உணவு பாதுகாப்பு அதிகாரி என்றும், போலீஸ் என்றும் இடத்திற்கு தகுந்தார்போல் பொய் பேசி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேல் வசூல் செய்ததாக தெரிகிறது.
மேலும் சரக்கபிள்ளையூர் நான்கு ரோடு பகுதியில் முத்து மகன் வடிவேல் சிக்கன் கடையருகே டிப்டாப் ஆசாமிகள் பணம் கேட்கும்போது பொதுமக்கள் ஆசாமிகளை தட்டி கேட்டபொழுது அவர்கள் அங்கிருந்து தப்பித்தனர். இதையடுத்து அவர்களை திரைப்பட பாணியில் இருசக்கர வாகனத்தில் ஆசாமிகளை சேஸிங் செய்து பிடித்து தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது போன்ற பல்வேறு இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. பட்டபகலில் போலீசார் வேடத்தில் கடைகளில் மாமூல் வாங்கிய இரண்டு ஆசாமிகளை பொதுமக்கள் பிடித்து கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.