அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட, கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த, சங்கர் (41), இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, மேலராமநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வம், கோவிலில் குடும்பத்துடன் சேர்ந்து கிடா வெட்டி சாமி கும்பிட்டுள்ளார். அப்போது கீழக்கொளத்தூர் கிராமத்தை, சேர்ந்த குருசாமி என்பவரின், மகன் வேல்மணிகண்டன் (24) , சாப்பிட வந்துள்ளார். பின்னர் குடிபோதையில் கறி சாப்பாடு, சரியில்லை என வேல்மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து சங்கர் அவரை சமாதானம் செய்து, அனுப்பி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம், வீட்டின் முன்பு வந்து, தகாதவார்த்தைகளால், பேசியுள்ளனர். இதையடுத்து, கட்டையால் சரமாரியாக, தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும், அப்பகுதி மக்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, சங்கர் அளித்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை, தாக்கிய வீரமணிகண்டன், வேல்மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.