மதுரை: ரயில்வே காலனியில்சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் புகுந்து திருட்டு மதுரை மார்ச் 11 ரயில்வே காலனியில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு உள்ள பொருட்களைதிருடிச் சென்று விட்டனர்.ரயில்வே காலனியில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த கம்ப்யூட்டர் ,மானிட்டர்,சி.பியூ,கீபோர்டு,மெளஸ்,பென்டிரைவ் முதலியவைகளை திருடிச் சென்று விட்டனர் .இந்த திருட்டுகுறித்து ஆனந்தன் என்பவர் கொடுத்த புகாரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி