மதுரை : வேடசந்துார் ரோட்டில், கே.அத்திக்கோம்பை பேருந்து நிறுத்தம், அருகில் மினி லாரி ஒன்றில் 35, மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது. இதன் எடை 1.5 டன். ஒட்டன்சத்திரம் காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட வினோபா நகரை சேர்ந்த பாண்டி செல்வம் (24), கருப்பன் சேர்வைகாரன் பட்டியை சேர்ந்த சங்கர் (30), வேல்முருகன் (21), ஆகியோரை, கைது செய்தனர். கடத்தப்பட்ட லாரி, வாகனம், கைதான மூவரையும், திண்டுக்கல் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையிடம், ஒப்படைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி