மதுரை : ஆட்சியரின் புகைபடத்தைமுகப்பு படமாக வைத்து 80887 65749 என்ற அலைபேசியின், வாட்ஸ் ஆப்பை ஒருவர் பயன்படுத்தினார். அந்த அலைபேசி மூலம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஹாய்’ என எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார். சந்தேகமுற்ற அலுவலர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி அந்த அலைபேசியில், பேசியபோது எதிர் முனையில் பதில் அளித்த நபர் ஹிந்தி, கன்னட மொழியில், பேசியுள்ளார். ஆட்சியர் இதுகுறித்து ஆய்வு செய்து இந்த எண் அரசு அலுவலர் எண் இல்லை என உறுதி செய்தார். எஸ்.பி.,திரு. பிரவீன்உமேஷ் டோங்க்ரேவிடம், புகார் அளித்தார். சைபர் கிரைம் காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து அலைபேசி எண்ணை பயன்படுத்தியவர் யார் என விசாரிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி