விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவின் பேரில், செஞ்சி உட்கோட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னியூரில், புகையிலை மற்றும் குட்கா, பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,
கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. எழிலரசி மற்றும் காவலர்கள் தலைமையில், காமராஜர் தெருவில் உள்ள பெட்டிக்கடைகளில், சோதனை செய்ததில், விஜயன் என்பவரது கடை மற்றும் குற்றவாளியின், வீட்டில் சுமார் 1 1/2 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல், செய்து கைது செய்யப்பட்டுள்ளது.