திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை காவல் கண்காணி ப்பாளர் திரு.ஜெயபால் பர்ணபாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரமா, உதவி ஆய்வாளர் திரு.பொன்சன் மற்றும் காவலர்கள் அடங்கிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
இத்தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதிவாணன்,(தலைமையகம்), மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன் ஆகியோர் மூலம் கண்காணிக்கப்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற் கொண்டதற்காகவும், தேர்தல் பணிகளை சிறந்த முறையில் நடத்தி முடித்தற்காகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், சிறப்பாக பணிபுரிந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று பாராட்டி கேடயம் வழங்கினார்.