திண்டுக்கல் : பழனி அருகே கீரனூர் வழியாக இயக்கப்படும் லாரிகள், அதிவேகமாக இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கல், மண் ஏற்றி வரும் லாரிகள் பள்ளி வளாகம், கோவில், பள்ளிவாசல் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அதிவேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், கீரனூர் பள்ளிவாசல் அருகே மண் ஏற்றி வந்த 11 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கிருபா, கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர்.