கோவை: கோவை பக்கம் உள்ள சுண்டக்காமுத்தூர் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43) இவர் காந்திபுரம் முதல் வீதியில் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார்.இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயினால்அவதிப்பட்டு வந்தார்
.இந்தநிலையில் நேற்று அதிகாலையில் எழுந்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டார்.இவரது மனைவி எழுந்து சமையல் அறைக்கு சென்றபோதுஅங்கு ஒரு கடிதம் எழுதி வைக்கப்பட்டிருந்தது.அதில் செல்வகுமார் கூறியிருப்பதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயினால் அவதிப்படுகிறேன்.
மேலும் கொரோனாவில் கடந்த 2ஆண்டுகளாக சரிவர தொழில்நடக்கவில்லை. கடன் தொல்லை என்னை வாட்டி எடுக்கிறது.எப்படி வாழ்வது? என்று எனக்கு தெரியவில்லை.எனவே இன்று நான் பிரிண்டிங் பிரஸ்சில் தற்கொலை செய்து கொள்கிறேன்.நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் .
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதைப்பார்த்த அவரது மகன் அஜய்குமார் காந்திபுரத்தில் உள்ள பிரின்டிங் பிரஸ்க்கு சென்றான். அங்கு செல்வகுமார் நைலான் கயிற்றை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியது தெரியவந்தது.இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.