விருதுநகர்: தமிழகத்தின் இரண்டாவது மிக பெரிய தேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேராகும். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் தேரோட்ட விழா 27.07.2019-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் தேரோட்ட நிகழ்ச்சி ஆடிப்பூரம் நாளான 04.08.2019-ம் தேதியன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பொதுமக்களுடன் இணைந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். மேலும் இத்தேரோட்ட விழாவில் வெளிநாடு உட்பட அனைத்து மாநில, மாவட்டங்களிலிருந்து சுமார் லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்கள் தலைமையில் சுமார் 1500 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியும்¸ ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும்¸ சிசிடிவி கேமராக்கள் பெருத்தியும்¸ “நாங்கள் உங்களுக்கு உதவலாமா” என்னும் சிறப்பு கட்டுபாட்டு அறையின் மூலம் பொதுமக்களுக்கு உதவி புரிந்தும்¸ அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி எவ்வித அசம்பாவிதமுமின்றி நல்ல முறையில் தேரோட்ட விழா இனிதே நிறைவு பெற்றது.