விருதுநகர்: மாவட்டம் மாரனேரி காவல் நிலையம் சார்பாக AVM பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கல்வி, ஒழுக்கம், பெற்றோரின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் காவல்நிலைய ஆய்வாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, உதவி ஆய்வாளர்கள் திரு. ஆதீஸ்வரன் அவர்கள் மற்றும் திரு. மாரியப்பன் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவுரைகளை வழங்கினர்.மேலும் நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக சிறப்பாக பேசிய மாணவ,மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.