கடலூர் : கடலூர் மாவட்டம்¸ விருத்தாச்சலம் காவல் நிலைய காவலர்கள் திருமேனி மற்றும் திருமுருகன் இவர்கள் 19.10.2018-ம் தேதியன்று பாலக்கரை பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கைப்பை இருப்பதை கண்டனர்.
அந்த பையில் ரூ. 50¸000 இருந்தது உடனே காவலர்கள் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபா சத்தியன் இ.கா.ப அவர்களிடம் ஒப்படைத்தனர். கைப்பையில் இருந்த அடையாள அட்டையில் இருந்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த போது கைப்பையில் இருந்த முழு விவரத்தை தெரிவித்தனர்.
அதன்பேரில் தவறவிட்ட கைப்பையின் உரிமையாளர் கீதா மற்றும் அவரது கணவரை வரவழைத்து அவர்களிடம் கைப்பையை ஒப்படைத்தனர். காவல்துறையின் இச்செயலை கண்டு மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சரியான நேரத்தில் பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு ஒப்படைத்ததை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் இ.கா.ப அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.