திருப்பூர்: திருப்பூரில், ரோட்டில் கிடந்த, இரண்டு லட்சம் ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு வீரரை கமிஷனர் பாராட்டினார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் கொடிசேகரன், 42, என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம், மனைவி இளவரசியுடன் டூவீலரில், உறவினர் ஆறுமுகம், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காந்திநகர் அருகே மீன் மார்க்கெட் பகுதியில் ரோட்டில், ஒரு பண்டல் கிடந்தது.
டூவீலரை நிறுத்தி பண்டலை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், ரூ.2 லட்சம் அளவுக்கு இருந்தது.இத்தொகையை, போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாரிடம், கொடிசேகரன் ஒப்படைத்தார். அவரின் நேர்மையை, கமிஷனர் பாராட்டினார். உரிய விசாரணை செய்து, பணத்தை தவற விட்டவரிடம் திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.