இராமநாதபுரம் : ராமேஸ்வரம் வடகாடு சேர்ந்த மீனவ பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், ஒடிசா இளைஞர்கள் 6 பேரைகாவல் துறையினர் , கைது செய்து விசாரித்தனர். இதில் ராணாரஞ்சன்(34), பிரகாஷ் (22), இருவரும் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைக்க காவல் துறையினர் , முடிவு செய்து உள்ளனர். மீதமுள்ள விகாஸ், பிரசாத், ராகேஷ், பிண்டு ஆகியோரிடம் காவல் துறையினர், தொடர்ந்து விசாரிக்கின்றனர். மீனவ பெண் காதில் அணிந்திருந்த நகையை ராமேஸ்வரம், நகை கடை வீதியில் உள்ள கடையில் பிரகாஷ் விற்றுள்ளார். நேற்று இக்கடைக்குகாவல் துறையினர் , பிரகாஷை அழைத்து வந்து விசாரித்தனர்.