சென்னை : அமெரிக்காவில் செயல்படும் தனியார், தொண்டு நிறுவன நிர்வாகிகள், மத்திய அரசுக்கு இ -மெயில் வாயிலாக புகார் ஒன்றை அனுப்பினர். அதில் சென்னையைச் சேர்ந்த நபர், ஒருவர் இணையதளத்தில் சிறுமியரின் ஆபாச படங்களை பார்த்து, அதை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளம், வாயிலாக நண்பர்களுக்கு, அனுப்புவதாக தெரிவித்தனர். இந்த புகார் சென்னை காவல் ஆணையர், அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம்காவல் துறையினர், முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
மேல் விசாரணைக்காக இப்புகார் வேப்பேரி, மகளிர் காவல் நிலையத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் சூளை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (18), என்ற கல்லுாரி மாணவர் சிறுமியரின் ஆபாச படங்களை இணையத்தில், பார்ப்பதும் அதை சமூகவலைதளம் வாயிலாக, நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமார், நேற்று கைது செய்யப்பட்டார். அவரின் நண்பர்கள் குறித்தும் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.