திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,பணக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக அன்டோ பிரதீப் பணியாற்றி வருகிறார். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பணகுடி பகுதி அருகே உள்ள காட்டுப்பகுதியில் நான்கு வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
இவர்களை நிலையம் அழைத்து வந்து மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும் நான்கு வாலிபருக்கும் அவர்களுடைய சமூகப் பொறுப்பை உணர்த்தும் விதமாக ஆளுக்கு ஒரு மரக்கன்று கொடுத்து அவற்றைப் பொது இடத்தில் நடசெய்தார்.
மேலும் தினமும் அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி அதை செல்போனில் படம் பிடித்து எனக்கு காட்டும் படியும், இதுபோன்ற நேர்மையான எண்ணங்கள் கொண்டு பிறருக்கு உதவ வேண்டும் எனவும் மேலும் இனி இவ்வாறான தவறான பாதையில் நடந்துகொள்ளக் கூடாது எனவும், அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இச்செயல் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.