மதுரை: மாநகர் B4 கீரைத்துறை ச&ஒ காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் (3482) திரு.சிவகுமார் அவர்கள் கடந்த 02.08.2019 அன்று வாகன விபத்திற்குள்ளாகி அகால மரணமடைந்தார். அவர் 1997 வருடம் காவலர் பயிற்சி முடித்தவர். பழனி பயிற்சிப்பள்ளியில் 1997 -ம் ஆண்டு காவலர் பயிற்சி பெற்ற அனைத்து காவலர்களும் இணைந்து சிவகுமார் குடும்பத்தினருக்கு ரூ.3,56,000/- நிதி உதவியை வழங்கி தங்களது ஆழ்ந்த இரங்களை அவரது இல்லத்திற்கு சென்று தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்