மதுரை : மதுரை மாநகர் கூடல்புதூர், பகுதியில் பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.T.செந்தில்குமார் IPS., அவர்களின் உத்தரவின் பெயரில் காவல் துணை ஆணையர் (வடக்கு) முனைவர்.திரு.T.K.இராஜசேகரன்,IPS., அவர்களின் நேரடிப்பார்வையில் செல்லூர் சரக காவல் உதவி ஆணையர் திரு.M.விஐயகுமார், அவர்களின் தலைமையின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை, தேடிவந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த A.ஐந்தரநாத் (எ)ஆனந்த், மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த ரெங்கநாதன், ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்தபோது பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து, சுமார் ரூ.6-லட்சம் மதிப்பிலான 15-பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















