மதுரை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் மரக்கன்றுகளை தொடர்ந்து நட்டு வருகிறார்கள். இன்று மதுரை மாநகர் தல்லாகுளம் (ச.ஒ) காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் மதுரை மாநகரில் உள்ள குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி நிபந்தனை ஜாமீனில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவர்களும் மற்றும் காவலர்களும் இணைந்து இன்று (21.08.2019) காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்