மதுரை மாவட்டம்: பாலமேடு, ராமகவுண்டம்பட்டி ஓடை அருகே போலீசார் ரோந்து சென்றபோது அங்கே டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேற்படி வாடிபட்டியைச் சேர்ந்த குமார் (25) என்பவரை கைது செய்தும். அவர் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தும், பாலமேடு போலீசார் குமார் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்