மதுரை: B4-கீரைத்துறை ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மதுரைவீரன் மற்றும் அன்று 17.08.2019-ம் தேதி ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கீரைத்துறை, சிந்தாமணி ரோடு பழைய சோதனை சாவடி அருகில் வாகன சோதனையின் போது கிடைத்த ரகசிய தகவலின்படி TN 04 AH 7725 Swift Dzire என்ற காரில் 1) கார்த்திக் @ கொலு கார்த்திக் 29/19, த/பெ. ராமசாமி, பள்ளிவாசல் TNHB காலனி, மேல அனுப்பானடி, மதுரை 2) விஜயகுமார் 2719, த/பெ.ஆசைதம்பி, திருமங்கலம், மதுரை மாவட்டம். 3) கணேஷ் பாபு 29/19, த/பெ.குமார், அண்ணாநகர், மதுரை ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. எனவே மேற்படி மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5.250 கிலோ கிராம் கஞ்சா, TN 04 AH 7725 Swift Dzire என்ற கார், கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.2000/- மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்