கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் IPS., அவர்களின், அறிவுரையின் பேரிலும் விருத்தாசலம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபாசத்யன் IPS, அவர்களின் மேற்பார்வையிலும் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் திரு. இராஜதாமரை பாண்டியன் தலைமையிலான விருத்தாசலம் காவலர்கள், வருகின்ற மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுத்தாறு கரையோரம் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறபடுத்தி ஆற்றங்கரையை அழகுபடுத்தினார்கள்.
இச்செயலை கண்டு பொதுமக்கள், வியாபாரிகள், பத்திரிக்கையாளர்கள் காவல்துறையை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்கள்.