கடலூர்: கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் காவல்துறையினர் மற்றும் மீனவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு விளையாட்டு போட்டி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியர் அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே நடைபெற்றது. இதில் கபடி போட்டியில் 3 அணிகளும், கைப்பந்து போட்டியில் 5 அணிகளும் மோதின. இறுதியில் கபடி போட்டியில் சாவடி அம்மன் பிரதர்ஸ் அணி முதல் இடத்தையும், காவல் அணி 2–வது இடத்தையும், கைப்பந்து போட்டியில் காவல் அணி முதல் இடத்தையும், தேவனாம்பட்டினம் மீனவர்கள் அணி 2–வது இடத்தையும் பிடித்தது.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் கடலூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன், ஊர்காவல்படை வட்டார தளபதி டாக்டர் சுரேந்திரகுமார் மற்றும் உதவி- ஆய்வாளர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.