மதுரை : மதுரை மாநகர் மண்டேலாநகர் அருகில் உள்ள கடைகளில் நேற்று (08.09.2019) முன்தினம் போலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்கள் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. சக்தி மணிகண்டன் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்தபோது நரிமேட்டை சேர்ந்த சங்கர் 46/19 த/பெ.கிருஷ்ணன், மீனம்பாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் 39/19 த/பெ.ராஜரத்தினம் மற்றும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் 45/19 த/பெ.மாணிக்கவேல் ஆகிய மூவரும் போலி லேபிள்கள் ஒட்டிய பீடி பாக்கெட்டுகள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தார். எனவே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து TATA ACE நான்கு சக்கர வாகனம் மற்றும் போலி லேபிள் ஒட்டிய 72 பீடி பண்டல்களும் கைப்பற்றபட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்