கோவை : கோவை விமான நிலையத்துக்கு, நேற்று முன்தினம், ‘ஏர் அரேபியா’ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள், அவர்களது உடமைகளை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சோதனையிட்டனர். அப்போது (30), வயது, உகாண்டா நாட்டு பெண் ஒருவர், மிகுந்த சிரமப்பட்டு நடந்து செல்வதை அதிகாரிகள் கண்டனர். விசாரணையில், போதைப் பொருள் இருக்கும், 41 ‘கேப்சூல்’களை விழுங்கியிருப்பதாக, பெண் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணை, வருவாய் புலனாய்வு பிரிவினர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை, அளித்து போதைப்பொருள் இருக்கும், கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன.’அந்த பெண்ணுக்கு பலத்த காவல் துறையின், பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் உடல் நலம் தேறியவுடன், விசாரணை நடத்தப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
                                











 
			 
		    



