சென்னை : சென்னை, செங்குன்றம் திருவொற்றியூர், நோக்கிச் சென்ற தடம் எண் 157, மாநகர பேருந்தை, நேற்று முன்தினம் மாலை, ஓட்டுனர் நடராஜன், (43), என்பவர் ஓட்டிச் சென்றார். தண்டையார்பேட்டை, இளைய முதலி தெரு அருகே சென்ற போது, பேருந்தில் பயணித்த போதை, ஆசாமி ஒருவர், திடீரென முன்பக்கம் வழியாக குதித்து இறங்க முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மீது, பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கி, கால் நசுங்கி படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை, போக்குவரத்து காவல் துறையினர், அந்த நபரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பேருந்து ஓட்டுனர் நடராஜனிடம் விசாரிக்கின்றனர். படுகாயமுற்ற நபர், மதுரையைச் சேர்ந்த ரமேஷ், (40), என தெரிந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.