கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கோ, ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் அபிஷேக், (30), ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராசி, (27) ,மருத்துவர் . இவர்கள் இருவருக்கும் கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ராசி கடந்த சில நாட்களாக கெண்டையூர் ரோட்டில், உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், திடீரென நேற்று முன்தினம் வீட்டில் பேனில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி ஆறு மாதமே ஆனதால், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், விசாரணை நடத்தி வருகிறார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்