சென்னை :  சித்துார் மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த, சத்தியசாய் காலனியைச் சேர்ந்த ராதாராணி, (28),  இவருக்கும், அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மலு, (32), என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கணவர், மனைவிக்கும் இடையே, நான்கு மாதங்களாக குடும்ப தகராறு,  ஏற்பட்டு வந்தது. இதனால், ராதாராணி, கணவரிடம் இருந்து பிரித்து, அதே பகுதியில் தனியாக, வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, ராதாராணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமு, 30, என்பவருக்கும் இடையே, கள்ள தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், ராதாராணியின் கணவர் நேரில், வந்து மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அழைத்தார்.
அதற்கு, ராதாராணியும் ஒப்புக் கொண்டதால், ஆத்திரமடைந்த ராமு, உருட்டை கட்டையால் அடித்து கொலை செய்தார். அப்போது தடுக்க வந்த ராதாராணியின் சகோதரர், வெங்கடரமணா, (37), என்பவரையும் ராமு கட்டையால், அடித்து கொலை செய்தார். இருவரும் சம்பவ இடத்திலேயே, இறந்தனர். புங்கனுார் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்த போது ராமு, தப்பியோடி விட்டார். புங்கனுார் காவல் துறையினர், வழக்கு பதிந்து ராமுவை தேடி வருகின்றனர்.
                                











			
		    



