நெல்லை மாநகர புதிய காவல் ஆணையாளராக திரு. தீபக் மோ.டாமோர் IPS அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவி ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆணையரின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் :
?காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கப்படும்.
?நெல்லை மாநகர பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் .
?போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
?சட்ட விரோத நபர்கள் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு தெரிவிப்பத்தின் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .
?ஜாதி மோதல்கள் மற்றும் கொலைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் .
?பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்களுக்கு இடையே ஜாதி மோதல்கள் ஏற்படாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் .
?நமது நெல்லை மாநகரத்தை அமைதியான நகரமாக மாற்ற ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை காவல் துணை ஆணையர் திரு.சரவணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.