நாமக்கல்: சேலம் ரோடு சந்திப்பில் நேற்று மாலை ஆட்டோவும் பேருந்தும் மோதிக்கொண்டதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தது, இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அங்கு நின்று இதனைப் பார்த்த போக்குவரத்து பெண் காவலர் கொழுந்தரசி யாரையும் எதிர்பார்க்காமல் அருகில் இருந்த டீக்கடையில் விளக்குமாறு வாங்கி சிதறிக்கிடந்த கண்ணாடிகளை சுத்தம் செய்தார், இதைப் பார்த்த மக்கள் அந்த பெண் காவலரின் செயலை வெகுவாக பாராட்டி சென்றனர்.