திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் பயன்கள் பற்றியும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் எடுத்துரைக்கும் நோக்கத்துடன் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி சுபாஷினி அவர்கள் புதிய முயற்சியாக பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வைத்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வரும் நபர்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மற்றும் ஹெல்மெட் அணிவதன் நோக்கத்தைப் பற்றியும் நாடகமாக நடித்து காட்டினார்கள்.
பொதுமக்கள் அனைவரும் காவல்துறை இவ்வாறு நடத்திய விழிப்புணர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என காவல்துறையினரை பாராட்டினர்.
ஆலங்குளத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்