திருநெல்வேலி: மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித் திரிவதைக் கண்டு அவரை மனிதநேயத்துடன் மீட்டு வடகரையில் உள்ள அன்பு இல்லத்தில் சேர்த்தார். மேலும் அந்நபரை பற்றி விவரம் தெரிந்தால் காவல் நிலையத்திலும் அல்லது அச்சன்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் கைப்பேசி எண் : 9498192323 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். காவல் உதவி ஆய்வாளரின் மனிதநேயமிக்க இச்செயலானது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது.