திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக மரங்கள் வெட்டப்படுவதால் மழை பொழிவு குறைந்து வருகிறது. இந்நிலையில் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 17.08.2019 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஹாசினி மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 120 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஊன்றினர். இந்நிகழ்வால் பிற்காலத்தில் பசுமை பெருகி மழைப்பொழிவு அதிகரிக்கும்.