திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், என்ற உத்தரவிற்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணங்கள், விளம்பரங்கள் மற்றும் கட்சிகள் தொடர்பாக அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று மாவட்டம் முழுவதும் சுமார் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்ததில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விளம்பர பதாகைகள் பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.