கடலூர் : கடலூர் விருத்தாசலம், அடுத்த ஆலடி அருகே உள்ள முத்தனங்குப்பம், கிராமத்தைச் சேர்ந்தவர் பூராசாமி (59), இவருடைய மனைவி தமிழரசி (52), இவர்களுடைய மகன் சிவராஜ் (31), இந்த நிலையில் சிவராஜின் மாமனார் கொளஞ்சி, அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் தமிழரசி மூலமாக, ரூ.2½ லட்சம் கடனாக வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கொளஞ்சி அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதையடுத்து கடன் கொடுத்தவர் அடிக்கடி தமிழரசியிடம் வந்து பணம் கேட்டுள்ளார். இந்த தகவல் சிவராஜிக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் நேற்று குடிபோதையில், தனது மனைவி உமாமகேஸ்வரியை அடித்து தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த தமிழரசியை, உங்களால் தான் குடும்பத்தில் பிரச்சினை வர காரணம் எனக்கூறி, அவரை அடித்து உதைத்து அருகில் இருந்த புளியமரத்தில் தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தமிழரசி ரத்த வெள்ளத்தில், மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலடி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகன் அடித்துக்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.