சென்னை: சென்னை மாநகர காவல், தாம்பரம் எல்லைக்குட்பட்ட தாம்பரம் காவல்நிலையம் மற்றும் குரோம்பேட்டை காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள், காவல்துறை ஆளினர்கள் நல்லுறவு விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.
காவலர்களை உட்கார வைத்து காவல் இணை ஆணையர் திருமதி.மகேஸ்வரி, துணை ஆணையர் திரு.பிரபாகரன், உணவு பரிமாரினார்கள். உணவு பரிமாறும் போது இணை ஆணையர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் ஒவ்வொரு காவலரிடமும் , உடல்நிலை, குடும்ப விபரம், குழந்தைகள் என்ன படிக்கின்றனர் மற்றும் வேலை செய்யும் இடம் வீடு இருக்கும் தூரம் எல்லாம் விசாரித்தார்.
இந்த நிகழ்வு மிகுவும் வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விழா ஏற்பாட்டை தாம்பரம் உதவி ஆணையர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.