தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். அவர்களுக்கான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. தமிழ்நாடு போலீஸ் அகாடமி திட்ட இயக்குனர், ADGP திரு. ஜாபர் சேட்,IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு
2. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழல், ADGP திரு.ஸ்ரீலட்சுமி பிரசாத், IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு
3. சிறைத்துறை ADGP திரு.அசுதோஷ் சுக்லா,IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு
4. ADGP மிதிலேஷ் குமார் ஜா, IPS – டிஜிபி மத்திய பணியிடம்
5. காவல்துறை தொழில்நுட்ப பிரிவு ADGP திரு.தமிழ்ச்செல்வன், IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு
6. காவல்துறை தலைமையிடம் ADGP திரு.ஆசிஸ் பெங்ரா,IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு
பதவி உயர்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.