சென்னை: பெருநகரில், தலைமை செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையில் நவீனப்படுத்தும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக “அம்மா பேட்ரோல்” என்ற பெயரில் புதிய ரோந்து வாகனங்களின் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 40 இன்னோவா கிரிஸ்டா வாகனங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி தொடர்பு எண் 1098, மற்றும் பெண்களுக்கான அவசர உதவி தொடர்பு எண் 1091 என வாகனத்தில் பதிக்கப்பட்டுள்ளது. “அம்மா பேட்ரோல்” என்ற வாகனங்களில் முன்புறம் பதிவு வசதியுடன் கூடிய கேமராக்களும், அவசரகால ஒலி எழுப்பும் கருவி மற்றும் விட்டு, விட்டு ஒளிரும் படிவான எல்.ஈ.டி விளக்குகளும் பொருத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப வசகிகளை கொண்ட ரோந்து வாகனங்களை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாண்புமிகு. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை நினைவில் கொள்ளும் வகையில் ‘‘அம்மா பேட்ரோல்’’ என்ற வாகனங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பணியில் உள்ள 35 காவல் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் கொடுக்கப்படுகின்றன.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 201 உடல் இணை நிழற்பட கருவிகளை வழங்கியும் மற்றும் தமிழ்நாடு காவல் துறையில் நவீனப்படுத்தும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த “அம்மா பேட்ரோல்” எனப்படும் ரோந்து வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 26.08.2019 அன்று தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி, சென்னை பெரு நகர காவல் ஆணையர் முனைவர் திரு.விஸ்வநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.