சென்னை: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 113 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலக வளாக ரைபில் கிளப்பில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 12.08.2019 அன்று பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.