சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு (CWC) சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு
பேரணியை துவக்கி வைத்தார். குழந்தைகளுக்கான எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னை பெருநகர காவல் துறை , குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு (CWC) சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் போலீஸ் பூத் அருகில் 03.08.209 அன்று காலை 10.00 மணிக்கு துவங்கப்பட்டது. இப்பேரணியில் சுமார் 3361 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்கள் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் உயர்திரு.,S.மணிகுமார், உயர்திரு.M.S.ரமேஷ், உயர்திரு..T.ராஜா மற்றும் உயர்திரு..ஹமலதா ஆகியோர்கள் கலந்துகொண்டு கொடியசைத்து பலூன்களை பறக்கவிட்டு துவங்கப்பட்டது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து இப்பேரணியில் அனைவரும் உரையாற்றினார்கள்.