சென்னை: சென்னை புழல், திருச்சி, கோவை மற்றும் சேலம் சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் 4 பேருக்கு பணியிட மாற்றம் மற்றும் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பணியிட மாற்றம் அடைந்தோர்,
சென்னை, புழல் முதல் சிறையின் கண்காணிப்பாளர் திருமதி.ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை சிறை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் சிறை கண்காணிப்பாளரான திருமதி.ஆண்டாள், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி சிறை கண்காணிப்பாளரான திருமதி.நிகிலா நாகேந்திரன், கடலூர் மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு:
கோவை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் பதவிஉயர்வு பெற்று, கோவை சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சிறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.முருகேசன் பதவிஉயர்வு வழங்கப்பட்டு, திருச்சி சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.