திருச்சி: திருச்சி மத்திய சிறையில் வெளி நாடுகளை சேர்ந்த தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன்(28) என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 19-ந்தேதி அதிகாலை ஸ்டீபன் பால் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டார். விசாரணையில், சிறை சுவற்றின் அருகே இருந்த 25 அடி உயர பெரிய மரத்தில் ஏறி அவர் தப்பித்தது தெரிய வந்தது. கைதி ஸ்டீபன் சிறையிலிருந்து தப்பித்துச் சென்றது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் பெங்களூருக்கு பேருந்து மூலம் தப்பி சென்றதாக முதலில் தகவல் கிடைத்தது.
ஸ்டீபன் ஜான் பால் ஒ பிஜி யை பிடிப்பதற்கு என்று திருச்சி மாவட்ட காவல் ஆணையர் திரு அமுல்ராஜ் உத்தரவின் பேரில் கே கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் சகாயம். அன்பரசு தலைமையில் 8 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
அங்கு தனிப்படை விரைந்து சென்று விசாரித்தது. ஆனால், அங்கிருந்து மும்பைக்கு அவர் தப்பி சென்றது தெரிந்ததும் நைஜீரியா கைதியை தேடி மும்பைக்கு தனிப்படை சென்று உள்ளனர். ஆனால், நீண்ட நாட்கள் கைதி ஸ்டீபன் பிடிபடாமல் இருந்தார் இரண்டு மாதமாக பிடிபடாமல் இருந்த ஸ்டீபன் ஹரியானாவில் சுற்றி வளைத்து கைதுசெய்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு வழக்கு பதிவு செய்து திருச்சிமத்திய சிறையில் அடைத்தனர்.
இரண்டு மாதங்களாக கடினமாக போராடி பல மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் சாதனை புரிந்த கே கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் சேகர் சகாயம். அன்பரசு தனிபடை காவலர்களுக்கு பாராட்டு் மற்றும் வாழ்த்துகளை
திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் திரு அமல்ராஜ் தெரிவித்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி