கோவை : கோவை மதுக்கரை, அருகே அறிவொளி நகரிலுள்ள ஒரு கல்லூரியின் பின்புறம் ஒரு வாலிபர், அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டது. இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது தலையில் 2 வெட்டு காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ,பருத்திப்பட்டு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் செந்தில் சுபாஷ் (38), என்பது தெரியவந்தது, இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார், இவர் எதற்காக இங்கு வந்தார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்துவிசாரணை நடந்து வருகிறது, இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது, கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
